முள்ளிவாய்க்கால் நினைவு தீபத்தை எட்டி உதைத்தது பொலிஸ்;மாகாணசபையில் பதற்றம்

16.5.14

வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

 இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில்  அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  




இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் ,புலனாய்வுதுறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

0 கருத்துக்கள் :