ஏற்றது இந்தியா – மருத்துவ சிகிச்சைக்காக சென்றவரை திருப்பி அனுப்பியது

5.5.14

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தடைப்பட்டியலை, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் அலட்சியப்படுத்தியுள்ள போதிலும், இந்தியா இதனை அங்கீகரித்துள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலை ஏற்க முடியாது என்று கனடா ஏற்கனவே அறிவித்திருந்தது.

சிறிலங்காவில் இந்த அறிவிப்பை உதாசீனம் செய்யும் வகையில், தடைப்பட்டியலில் உள்ளடங்கியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தனிநபர்களுடன் கடந்த வியாயழக்கிழமை அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

ஆனால், இந்தியா இந்தப் பட்டியலுக்கு இணங்கிச் செயற்பட முன்வந்துள்ளது.
இதற்கமைய, சிறிலங்காவினால் தடைவிதிக்கப்பட்ட 424 தனிநபர்களில் ஒருவர் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பிரித்தானியாவில் இருந்து இந்தியா வந்த போது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்றும் பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :