ஈழ அகதிகள் தொடர்பில் இரு நாட்டு அரசும் பேசும் யாழ். இந்திய துணைத்தூதுவர்

20.5.14

இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் மீண்டும் நாட்டுக்கு திரும்பிவருவது குறித்து இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேசியே தீர்மானம் எடுக்கவேண்டும்.
அதே வேளை இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் நாட்டுக்கு திரும்பிவர தமது விருப்பத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
தென்னமெரிக்காவின் பிரிட்டிஷ் கயானாவிற்கு இந்தியத்ததூதுவராக மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கத்தை ஊடகவியலாளர் சந்தித்து நேற்று முற்பகல் யாழிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில்  இடம் பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் தங்களது நாட்டுக்கு திரும்பிவர விருப்பம் தெரிவிக்கப்படுமிடத்தே அவர்களை அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 
இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையளிக் கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது. காரணம் அகதிமுகாம் களிலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவிற்கு  அகதிகளாக சென்றவர்கள் அங்கு உயர் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். அதேவேளை அவர்களுக்கு போதியளவு சலுகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன என்றார்.
இதேவேளை யுத்தத்திற்குப்பின்னர் யாழ். மாவட்டம் பொருளாதார ரீதியில் உயர் நிலை அடைந்துள்ளது. யுத்த நிறைவுக்குப் பின்னர் கடந்த 3வருடங்களாக யாழ்ப் பாணத்தில் இந்திய துணைத்தூதரக தூதுவராக கடமையாற்றி வருகின்றேன்.
எனினும் நான் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன்.

எனக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்வதற்கு 18 மணித்தியாலங் கள் எடுத்தன. எனினும் இன்று அவ்வாறில்லை 7 மணித்தியாலயங்களுக்குள் வந்து சேர முடியும் வீதி அபிவிருத்தி உச்சநிலையில் உள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து முடிவு நிலையை எட்டியுள்ளது. தொலைத் தொடர்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மின்சார வசதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன. பல்பொருள் வாணிபங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமக்கு வேண்டிய தேவைகளை யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு பல மாற்றங்கள் கடந்த ஆண்டுகளுக்குள் விரிவடைந்துள்ளன.
எனவே யுத்தத்திற் குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொருளாதாரம் உயர் நிலை பெற்றுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் அபிவிருத்திக்கான உதவித்திட்டங்களில் புகையிரதப் பாதை அமைப்பு இடம் பெற்றது.
அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதை புனரமைக்கப்பட்டு தற்போது பளை வரை போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீதமாக உள்ள ரயில் பாதை களும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி எதிர்வரும் யூன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :