புலி உறுப்பினர்களுக்கு எவ்வாறு ஐ.நா அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது :விசாரணை

28.5.14

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு இரண்டாம் தலைவர் குஷான்தன் மற்றும் புலனாய்வுப் பிரிவு நான்காம் தலைவர் அன்தராயன் ஆகியோருக்கு எவ்வாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம்
அகதி அந்தஸ்து வழங்கியது என்பது குறித்து விசாரணை நடத்பத்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் அகதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குஷான்தனின் கடவுச் சீட்டும் மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குஷான்தன், தான் ஓர் சாதாரண பிரஜை எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு, மலேசிய பிரிவினைவாதத் தலைவர் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமையினால் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :