நான் மோடியை சந்திப்பேன், ரஷிய அதிபர் புதின் வாழ்த்து

25.5.14

இந்தியாவின் பிரதமராக நாளை (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ள நரேந்திரமோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திரமோடியை, ரஷிய அதிபர் புதின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், ‘இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் உங்களுக்கு, எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதாபிமான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ரஷிய பத்திரிகையாளர்களிடம் பேசிய புதின், ‘‘அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு எங்கள் உறவு இருக்கும். இந்தியர்களுடன் நாங்கள் நட்புறவுடன் இருக்கிறோம். இந்தியாவுடன் நல்லுறவு தொடர நாங்கள் விரும்புகிறோம். நான் மோடியை சந்திப்பேன், அவருடன் நெருங்கி பணியாற்றவும் இருக்கிறேன்’’ என்றார்.

0 கருத்துக்கள் :