ஜெயலலிதாவுக்கு டெல்லியில் அதிகாரம் கிடைக்காததால் மகிழ்ச்சி அடையும் இலங்கை அமைச்சர்!

20.5.14

டெல்லியில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு ஜெயல லிதாவுக்கு எந்த அதிகாரமும் கிடைக்காதது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கூறுகிறது.
இது தொடர்பாக இலங்கையின் ஊடகத்துறை மந்திரி கெஹலிய ரம்புக்வெல, ’’டெல்லியில் சக்தி வாய்ந்த அரசு அமைந்திருப்பது எங்களுக்கு மிகவும் நல்லது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் தேவையில்லாத நெருக்கடிகள் இல்லாமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க முடியும்.

மிகவும் வலுவான அரசு மற்றும் எந்த கட்சியையும் சாராமல் மெஜாரிட்டியுடன் மோடி ஆட்சியமைப்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஜெயலலிதா 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, அவரால் மத்தியில் செல்வாக்கான இடத்தில் இருக்க முடியாது.
மோடி வெற்றி பெற்றதும் அவரை முதலில் வாழ்த்திய வெளிநாட்டு தலைவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன’’ கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :