காசியை பற்றி எனக்கு ஒரு கனவு உள்ளது: நரேந்திர மோடி

18.5.14

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின்னர் சனிக்கிழமை வாரணாசி சென்ற அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் ஊர்வலமாக சென்று கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்தார். கங்கை நதியில், கங்கை ஆராத்தி நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-


தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தற்கான பெருமை தொண்டர்களையே சேரும். நான் பெற்ற வெற்றியை 126 கோடி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இங்கு குறைந்தளவு பிரசாரம் செய்தாலும், மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரித்துள்ளனர். வாரணாசி மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் எனது அமைதியை புரிந்து கொண்டார்கள்.


வாரணாசியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த போதே நான் இந்த மண்ணின் மைந்தானாக உணர தொடங்கினேன். காசியை பற்றி எனக்கு ஒரு கனவு உள்ளது. அதை வாரணாசி மக்கள் உதவியுடன் தான்  பூர்த்தி செய்ய முடியும்.


நான் வாரணாசியை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வேன். வாரணாசியில் எந்த ஒரு தெருக்களை கூட நாங்கள் அசுத்தமாக விட்டுவிடப்போவது இல்லை. உங்கள் ஓட்டுகள் மட்டும் எனக்கு தேவை இல்லை. உங்கள் ஆதரவும் தொடர்ந்து தேவை. இந்த இலக்குகளை அடையை உங்கள் ஒத்துழைப்பு தேவை.


1947க்கு பிறகு பெரும்பாலான அரசாங்கம் காங்கிரசால் அமைக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவை பெரும்பானைமையாக வெற்றி பெறவைத்ததற்கு நாட்டுக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். இந்த முறை  காங்கிரஸ் கட்சியால் பிரதான எதிர்கட்சியாக கூட இருக்க முடியவில்லை. நான் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் வாதத்தில் ஈடுபடவில்லை. வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவது கடவுளின் விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துக்கள் :