ராஜபக்சே அழைப்பை ஏற்று ஜூலைக்கு பிறகு இலங்கை செல்லும் மோடி...

28.5.14

இலங்கை வருமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். ஜூலை மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு மோடி பயணம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று ராஜபக்சேவிடம் மோடி தெரிவித்தார்.

 மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மோடியை ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனை, தமிழக விவகாரம் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

 ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், தமிழர்களுக்கு சம உரிமை, நீதி மற்றும் அமைதி கிடைக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்தினார்.
இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, மீள் குடியேற்றம், மறு கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மோடியிடம் ராஜபக்சே விளக்கினார்.

முந்தைய அரசின் திட்டங்களை தற்போதையை அரசிலும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழர் நலனில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக மோடி அப்போது தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :