நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கட்சி தலைவர்கள் கருத்து

18.5.14

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:கி.வீரமணி(திராவிடர் கழகம்): பெரிய அதிர்ச்சி தோல்வியை தந்த இந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தில் புதிதல்ல. வழமையானது தான். இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றி பெற்ற அனைவருக்கும், ஆட்சி தலைமை ஏற்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால் அதனை வரவேற்போம்.திருமாவளவன் (தலைவர், வி.சி.): முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை இப்போது தான் சர்வதேச சமூகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது பதவி இழந்துள்ள காங்கிரஸ் அரசு, ராஜபக்சேவுக்கு துணையாக அந்த தடையை இந்தியாவிலும் செயல்படுத்த போவதாக அறிவித்திருந்தது.

மத்தியில் புதிய அரசு ஒன்று பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்தியாவின் இலங்கை கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்கும் விதத்தில் இந்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

தமிமுன் அன்சாரி(மனித நேய மக்கள் கட்சி): இந்த தேர்தலில் இந்திய அளவில் மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் பின்னடைவு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது எதிர்பாராதது.

தமிழகத்தில் பணநாயகம் வென்றுள்ளது. 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில் ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது. இந்த தோல்வி எங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால் களத்தில் இருந்து எங்களை அகற்றிவிடாது.

0 கருத்துக்கள் :