சிறிலங்கா குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர கவலை

7.5.14

சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான கவலை கொண்டிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி டேவிட் டலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின் போது, சிறிலங்கா தொடர்பான தீவிரமான கவலைகள் ஏற்பட்டிருந்தன.
இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உணர்ந்தது.

சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நல்ல நண்பனாகவே பார்க்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை எழுப்பியதும் கூட, அந்த நட்புறவின் ஒரு பகுதி தான்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா அமைச்சர்களான, ராஜித சேனாரத்ன, டக்ளஸ் தேவானந்தா, திஸ்ஸ விதாரண, நியோமல் பெரேரா ஆகியோரும், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

0 கருத்துக்கள் :