சிறிலங்காவில் ஆளும்கூட்டணிக்குள் அதிகரிக்கும் பிளவுகள் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

1.5.14

முக்கிய விவகாரங்களில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளால், அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் திடீர் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்தியான வெற்றியை பெறமுடியாமல் போகலாம் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்தவாரம், சூதாட்ட விடுதிகளை அமைப்பது தொடர்பான சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பில், அரசதரப்பின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர்.
மதப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனியான காவல்துறை அமைக்கப்பட்ட விவகாரத்தில், ஜாதிக ஹெல உறுமயவுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
வில்பத்து முஸ்லிம் குடியேற்ற விவகாரத்தில் பொதுபல சேனாவுக்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், முரண்பாடுகள் வெடித்துள்ளன.

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையில் தோன்றியுள்ள இந்தப் பிளவுகள், நீடித்தால், அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் திடீர் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்தியான வெற்றியை ஆளும் கட்சியால் பெறமுடியாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :