லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்த ஈழத் தமிழ் இளைஞர் (Photos)

15.4.14

லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேளையில், பிரித்தானியாவைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞரான ரமணகரன் வேணுகோபால் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்திருந்தது. இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார். ரமணகரன் மரதன் ஓட்ட தூரத்தை 06:53:58 நொடிகளில் ஓடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :