பல பௌத்த பிக்குகள் அரசியல் பேசி வருகின்றனர் - அமைச்சர் துமிந்த

11.4.14

பல பௌத்த பிக்குகள் இன்று மத சிந்தனைகள் பற்றி அறிவுரை வழங்காது, அரசியல் பேசி வருகின்றனர் என கல்விச் சேவை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை மாற்றமடைந்து வருகின்ற போதிலும், நாட்டின் மக்களிடையே மனிதாபிமானம் இல்லாமல் போயுள்ளது

கிராமப் பகுதிகளின் வீடுகள் அமைக்கப்படுகின்றன, வீதிகள் செப்பனிடப்படுகின்றன, விமான நிலையம் அமைக்கப்படுகின்றது, மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்களை சமய வழிபாடுகளில் ஈடுபடச் செய்வது பௌத்த பிக்குகளின் கடமையாகும். மக்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கையை வேறு எவராலும் ஏற்படுத்த முடியாது.

நாட்டின் மத வழிபாட்டுச் சிந்தனைகளில் வீழச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகின்றன.

நான் எல்லா பௌத்த பிக்குகளையும் குற்றம் சுமத்தவில்லை. எனினும், ஒரு சில பௌத்த பிக்குகள் மத வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :