சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் கைது

21.4.14

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பிரதேசத்தில் 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய பூசகர் நோட்டன் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களின் பிறகு குறித்த சிறுமியின் தாய் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

சிறுமி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் மேற்கொன்டு வருகின்றனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின்னரே உறுதியாக எதையும் கூறமுடியுமென நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்

0 கருத்துக்கள் :