கடவுள்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றமை மிகவும் வேதனையளிக்கிறது:யோகராஜன்

7.4.14

நாட்டில் இந்து கடவுள்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றமை மிகவும் வேதனையளிக்கிறது. இன நல்லுறவுகள் பற்றி பேசிவரும் அமைப்புகளும் அரசியல் வாதிகளும் மதங்களுக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

தம்புள்ளையில் அகற்றப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலின் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பில் வினவியபோதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அக்டோபர் மாதம் தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில் அகற்றப்பட்டபோது புதிய காணியில் கோயில் புனர்நிர்மாணம் செய்து வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகாரசபை உறுதிமொழி வழங்கியது. ஆனால், இன்று வரை எதுவித ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

தம்புள்ளை பத்திரகாளி அம்மன் சிலை அகதியாக தனியார் ஒருவரின் வீட்டில் இருக்கிறது. அம்மன் அகதியாக இருக்கிறார். இதேபோன்று கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோயில் அகற்றப்பட்டு அங்கிருந்த இந்துக் கடவுள்கள் (சிலைகள்) கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் இருக்கின்றன. மொத்தத்தில் இந்துக் கடவுள்கள் அகதிகளாகி விடுகிறார்கள். சமூகம் இது தொடர்பில் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்றார்.  

0 கருத்துக்கள் :