நான்கு வாரங்களுக்குள் செயற்படத் தொடங்கும் ஐ.நா விசாரணைப் பொறிமுறை

7.4.14

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் செயற்படத் தொடங்கும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான செயல்முறைகள் முடிவுற்றதும், அதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் முறைப்படி அறிவித்து, ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும்.

அத்துடன், பகிரங்க அறிவிப்பும் கூடவே வெளியிடப்படும் என்றும் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இந்த விசாரணைப் பொறிமுறையை நிராகரிக்க சிறிலங்கா அரசாங்கம் கொள்கை ரிதியான முடிவை எடுத்துள்ளது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :