குடும்பம் நடாத்திய இரு யுவதிகளில் ஒருவர் வைத்தியசாலையில்

11.4.14

நவத்தேகமுவ பொலிஸ் பிரிவில் இரு யுவதிகள் குடும்பமாக வாழ்து வந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரித்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதிலொரு யுவதி தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயன்ற போது காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

22 வயதுடைய இவ்விரு யுவதிகளும் சுதந்திர வர்த்தக வலயப்பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

 அப்போது அவர்கள் இருவரும் ஒரு அறையில் வசித்து வந்த போது தகாத உறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் தமது தொழிலை விட்டு  பிங்கிரிய பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்று அங்கும் வழக்கம் போல் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
 இதில் சந்தேகம் கொண்ட பெற்றோர் எச்சரிக்கை விடுத்த போது இருவரும் தப்பி வந்து மற்றைய யுவதியின் வீட்டில் தங்கியுள்ளனர்.

 அவ்வீட்டைத் தேடிவந்த யுவதியின் பெற்றோர் நவத்தேகமுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து  எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 இந்நிலையிலேயே நவத்தேகமுவ பிரதேசத்தில் வசித்த யுவதி தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :