சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!

4.4.14

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமது கணவரான முன்னாள் இந்திய பிரதமா ராஜீவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை பழி தீர்த்துக் கொள்ள சோனியா விரும்பினார்.
இந்திய ஊடகவியலாளர் சாம் ராஜப்பா என்ற ஊடகவியலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவி;க்கப்படுகிறது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர்வதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென சோனியா விரும்பினார் என குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் பாராட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சித்த போதிலும்ää இந்தியா அதற்கு இடமளிக்கவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :