மற்றுமொரு புலிகளின் தலைவர் கைது என்கிறது பாதுகாப்பு தரப்பு

12.4.14

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சுமத்தி யாழ். வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

இவர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்று புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தாகவும் இவர் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கடந்த சில மாதங்களில் மாத்திரம் மலேசியாவில் உள்ள புலம்பெயர் அமைப்பொன்றின் தலைவர் 60 லட்சம் ரூபாவை அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் செயற்பாட்டில் இருந்த காலத்தில், சந்தேக நபர் அந்த அமைப்பின் நலன்புரி மற்றும் நிர்வாகத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ளதாகவும் இவருக்கு மலேசியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :