முல்லைத்தீவு உடையார்கட்டு “இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்” பாரிய வெடிப்பு சம்பவம்

3.4.14

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்றை கேட்க முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தை அடுத்து அப்பகுதியில் கரிய புகை படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே குறித்த வெடிப்புச்சத்தத்தை உணர முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தின் அதிர்வுகள் பல நூறு மீற்றர்கள் வரை எதிரொலித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவ ஆயுத களஞ்சியமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வெடிப்புச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பெரும் சத்தமிட்டவாறு தாறுமாறாக ஓடித்திரிந்ததாகவும் பிரதேசவாசிகள் ஒருவித பதட்டத்துடன் கூறுகின்றனர்.

0 கருத்துக்கள் :