விசாரணை வளையத்துக்குள் டக்ளஸ், கருணா, பிள்ளையான்

21.4.14

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமற்போகச் செய்யபபபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குணதாஸா.

காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் வழங்கிய பலர் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரே தமது உறவுகள் காணாமற் போனமைக்குக் காரணம் என்று கூறியிருந்தனர். அதையடுத்தே அவர்களிடம் விசாரçணை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

தற்போது குறித்த சாட்சியங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை உரிய முறையில் ஒழுங்குபடுத்திய பின்னர், ஆணைக்குழுவின் அதிகார வரம்புக்குட்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு வடக்கு கிழக்கில் தனது அமர்வுகளை நடத்தியுள்ளது. ஜனவரி மாதம் கிளிநொச்சியிலும், பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திலும், மார்ச் மாதம் மட்டக்களப்பிலும் தனது பகிரங்க மக்கள் அமர்வை நடத்தியிருந்தது.

0 கருத்துக்கள் :