உறவினரின் தாக்குதலில் செயற்கை பற்தொகுதி தொண்டையில் சிக்கிய நபர் பலி

15.4.14

புதுவருட கொண்டாட்டத்தின் போது வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டவர்கள் இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே மேற்படி சம்பவத்தில் 69 வயதுடைய முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை மொரகஸ்கொடுவ எனுமிடத்தை சேர்ந்த எச்.ஜீ. சூலாநந்த பெரேரா என்ற 69 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் மரணித்தவரை சந்தேக நபர் தாக்கிய சமயம் அவரின் செயற்கை பற்தொகுதி தொண்டையில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளார்.

இக் கொலை சம்பந்தமாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் மரண விசாரணையை கண்டி பதில் நீதிவான் மஹிந்த லியனகே நடத்தியதுடன் பிரேத பரிசோதனையை கண்டி வைத்திய சாலையின் சட்ட வைத்தி அதிகாரி சிவசுப்ரமணியம் மேற்கொண்டார்.

இச் சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :