இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது

29.4.14

மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டம், முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே, சந்தேகப்பட்ட போலீசார் புகார் அளித்த பெண்ணிடம் ‘உரிய’ முறையில் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் வாக்குமூலம் அளித்த அந்த பெண், தனது மகள் 4 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், கருவுக்கு காரணமானவன் யார்? என்ற உண்மையை மறைத்து, கருவையும் கலைக்க மறுத்த அவளை உறங்கும் போது கோடாரியால் வெட்டிக் கொன்று விட்டு, கொள்ளையர்கள் மீது பழியை போட முயன்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்னை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துக்கள் :