அமைதி முயற்சிகளில் என்ன நடந்தது? – நேர்மையாக வெளிப்படுத்துவேன் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

29.4.14

அமைதி முயற்சிகளின் போது என்ன நடந்தது என்பதை தமது நூலில் நேர்மையாக வெளிப்படுத்தவுள்ளதாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில், விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அமைதிய முயற்சிகளில் அனுசரணையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், அது தொடர்பான நூல் ஒன்றை எழுதி வருவதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்.
இந்தநிலையிலேயே, டுவிட்டரில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள அவர், அமைதிய முயற்சிகளின் போது என்ன நடந்தது என்பதை நேர்மையாக எடுத்துக் காட்டுவதே தமது நூலின் நேரக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா மக்களுக்குத் தாம் உண்மையாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் இந்தியாவுக்குச் சென்று பரிமாறியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
அமைதி முயற்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த மிகவும் முக்கியமான நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :