ஜேர்மனிய யுவதியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபர் கைது

23.4.14

ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிறிஸ்டினா எட்மன் என்று 22 வயதுடைய ஜேர்மன் யுவதி, தனது அறையில் இருந்தவேளை, குறித்த விடுதியின் ஊழியர் ஒருவர் இரவு நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அப்பெண்மணி சத்தமிட்டதன் காரணமாக குறித்த ஊழியர் அவ்விடத்திலிருந்து வெளியே சென்றுள்ளார்.
இச்சம்பவம் கடந்த நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், குறித்த ஜேர்மன் பெண்மணி நேற்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பெண்மணி வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, விடுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்த சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :