ஜெனீவா தீர்மானத்தை சிறிலங்காவில் அமுல்படுத்த அனுமதிக்கமாட்டோம் :ஜாதிக ஹெல உறுமய

1.4.14

இலங்கைக்கு எதிரான சர்வதேசத் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஜெனிவா தீர்மானம் இலங்கையில் செல்லுபடியாகாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி பற்றியும் வினவிய போது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “
இலங்கைக்கு எதிராக அமெரிக்கப் பிரேரணை கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றாலும் பிரேரணையினை ஒருபோதும் இலங்கையில் செயற்படுத்த விடமாட்டோம். அரசாங்கத்தை மீறி எவராலும் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது.

சர்வதேச நாடுகள் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகளை தீர்மானிக்க நாடு ஒன்று அடிமையில்லை. ஜெனிவா தீர்மானங்களை இலங்கையில் செயற்படுத்தி பிரிவினையினை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரிவினைவாதிகளுக்கு தக்க படிப்பினையினை நாம் கற்பிப்போம்.

அதேபோல் மீண்டுமொரு ஆயுத யுத்தத்தினை உருவாக்கும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது புலம்பெயர் பிரிவினைவாதிகளோ முயற்சிப்பார்களாயின் அந்த துரோகச் செயலை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றார் உதய கம்மன்பில.

0 கருத்துக்கள் :