புலிச் சந்தேக நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

21.4.14

தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தடுப்புக் காவலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
நோய் காரணமாக சிகிச்சைக்காக குறித்த புலிச் சந்தேகநபர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :