யாழில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது

17.4.14

யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் பொது மக்களை மீள் குடியமர்த்துவதற்காக இந்த காணியை மீண்டும் வழங்கியதாக யாழ். பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
குறித்த காணியில் இதுவரையில் 39 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 41 காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க,
எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம். எனக் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :