சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி வாழ்த்து

12.4.14

மலரப்போகும் தமிழ்,சிங்களப் புத்தாண்டு எல்லா இலங்கையர்களுக்கும் சகிப்புத்தன்மை, நல்லிணக்கம். அமைதி என்பனவற்றைக் கொண்டு வருவதற்கான புதிய வாய்ப்பை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் சிறிலங்காவில் கொண்டாடப்படவுள்ள புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஒபாமா. மற்றும் அமெரிக்க மக்களின் சார்பில்,சிறிலங்காவில் வாழும் மக்கள் அனைவருக்கும், புலம்பெயர் சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வளம்மிக்க ஜனநாயக சிறிலங்காவை கட்டியெழுப்புவதற்காக உங்கள் பணிகள் தொடரவும், பாதுகாப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான பண்டிகைக்காலம், அமையவும், அமைதியும், செழுமையும் நிலைக்கவும் வாழ்த்துவதாகவும் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :