மகிந்தராஜபக்ஷ தந்திரமான அரசியல்வாதி – சர்வதேச ராஜதந்திரிகள்

14.4.14

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோஏசியா ரவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு ராஜதந்திரிகளின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் அடுத்தக் கட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
ஒப்பீட்டளவில் இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு மிகக்குறைவு.
இந்த நிலையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் மகிந்தராஜபக்ஷ ஒரு தந்திரமான அரசியல்வாதி.
அவர் சீனாவின் உறவை தம்மை விரிவுப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமே பயன்படுத்தி வருகிறார் என்று அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :