அரசின் தேசிய கொள்கை ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதாகும்- சுட்டிக்காட்டினார் விவசாய அமைச்சர்

21.4.14

இலங்கை அரசின் தேசிய கொள்கை ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதாகும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
400 இளைஞர்களை ஈடுபடுத்தி பாதீனியம் ஒழிப்பில் நாம் ஈடுபட்டோம். இந்த பாதீனியம் ஒழிப்பிற்கு யாழ் மாவட்ட செயலகத்திற்கு என 3மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது இந்த பாதீனியம் ஒழிப்பில் இராணுவத்தினரின் பங்களிப்பும் தேவை என நாம் ஒருபோதும் கருதவில்லை.

இருப்பினும் இராணுவம் வந்து பாதீனியம் ஒழிப்பில் ஈடுபட்டால் நாம் அதையும் தடை செய்யவில்லை ஆனால் அவர்கள் ஒத்துழைப்பதால் மக்கள் அச்சத்திற்குள்ளாக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றார்கள் இராணுவத்திடம் ஒத்துழைத்து  பாதீனிய ஒத்துழைப்பில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

ஆகவே மாகாண விவசாய அமைச்சு இதனை பொறுப்பெடுத்து இந்த பாதீனிய ஒழிப்பை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு முயன்று செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :