முள்ளியவளை பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல்: இருவர் கைது

1.4.14

முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினரால் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மூன்று வெள்ளை வான்களில் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.

அவர்கள், தேடுதலில் ஈடுபட்டதுடன், அந்தப் பகுதியிலிருந்து இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் போராளி என்பதுடன் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மற்றையவர் அதேயிடத்தைச் சேர்ந்தவர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்ய முற்பட்டனர் என்று நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.

அதையடுத்து அந்தப் பகுதியில் கவச வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
காலையில் தொடங்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மாலை 4 மணிவரையில் நீடித்தாகத் தகவல்கள் தெரிவித்தன.

0 கருத்துக்கள் :