கிளிநொச்சியில் 64 வயது மூதாட்டி சி.ஐ.டியினரால் கைது

20.4.14

கிளிநொச்சியில்  64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்மாவதி எனும் 64 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூதாட்டியை தற்போது வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டமைக்கான தகவல்கள் எதுவும்
வெளிவர வில்லை.

இதேவேளை அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளை மீள; உருவாக்க முயற்சி செய்கின்றனர்  என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் அப்பாவிப் பொது மக்களை  பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :