எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி

7.4.14

லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன.

 அவர் தனது ஏனைய எதிரிகளது சடலங்களையும் குளிர்சாதனப்பெட்டிகளில்  வைத்திருந்து அடிக்கடி அவற்றைப்பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக மாட்டோக் இன்ஸைட் ம சீக் ரட் வோல்ட் ஒப் மும்மால் கடாபி என்ற காடாபி தொடர்பான புதிய ஆவணப்படம் தெரிவிக்கப்படுகிறது.

 கடாபி தனது எதிரிகளில் ஒருவரைக் கொன்று அவரது தலையை லிபியாவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்கியதாக அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன் கடாபி லிபிய திரிபோலி நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தனது பாலியல் செயற்பாடுகளுக்கென இரகசிய கூடத்தை நிர்மாணித்து தன்னால் தெரிவு செய்யப்படும் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகவும் அந்த ஆவணப்படத்தில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :