போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகள் பட்டியல் ஐ.நா

25.4.14

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மை காலங்களில் போர்களில்  பாலியல் கொடுமைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை ஆயுதமாக பயனபடுத்தப்பட்ட 21 நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த  மோதல்களில் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன இது தொடர்பான ஐ.நா பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்துள்ளார்.

போராட்ட குழுவினர், ஆயுதக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் பலாத்காரம்  மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு உள்ளன.

இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா, அங்கோலா,போஸ்னியா ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், காங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

0 கருத்துக்கள் :