அமெரிக்க இராணுவம் உட்பட 15 நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில்

1.4.14

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு இன்று காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் வலயத்திற்கான கட்டளைத் தலைமையகம் மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டு இராணுவப் பயிற்சி செயலமர்வு 
ஒன்பது நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிப்பு.

இந்தப் பயிற்சி  செயலமர்வில் இலங்கை சார்பாக முப்படையைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 21 பேர் கலந்துகொள்ளும், இதேவேளை அமெரிக்க உத்தியோகத்தர்கள் 21 பேரும், மேலும் 15 நாடுகளைச் சேர்ந்த 26 பேரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

இதேவேளை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இந்தப் பயிற்சி செயலமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :