அமெரிக்காவின் ஜெனிவா யோசனைக்கு சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஆதரவு

10.3.14

ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜெனிவா மனித உரிமைகள் 25வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனமாக ஆராய்ந்ததாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் சமவுரிமை என்ற நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான நீதியான நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதில் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தநிலையில் படையினரால் வடக்கு கிழக்கில் பாரியளவு காணிகள் அபகரிக்கப்பட்டமை மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து கூட்டமைப்பு கவலை கொண்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விக்னேஸ்வரனும் சம்பந்தனும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு பாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும். எனவே அமெரிக்காவின் யோசனைக்கு ஏனைய நாடுகளும் ஆதரவளிக்கின்றமை ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தும.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சம்பந்தனும் விக்னேஸ்வரனும் கோரியுள்ளனர்.

0 கருத்துக்கள் :