அனைத்துலக விசாரணை பொறிமுறைக்கான அதிகாரம் ஐ.நா அலுவகத்திற்கு உள்ளது : ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் !

17.3.14

அனைத்துலக மனித உரிமைசார் விவகாரங்களில் மனித உரிமைச்சபையின் அங்கீகாரத்துக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதென ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மார்ச் 17ம் நாள் திங்கட்கிழமை சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வு, நவிப்பிள்ளை அவர்களது தலைமையில் அவரது அலுவலகப்  பிரதிநிதிகளால் நடத்தப்பட்டிருந்தது


இதில் சிறிலங்காவினை மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வேளையிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.


ஐ.நா மனித உரிமைச்சபையின் நடைமுறைக்கு அமைய நாடுகளுக்கு அனைத்துலகம் ஏற்கதக்க உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றும், அது சாத்தியப்படாத நிலையில் அனைத்துலக தளத்தில் விசாரணைக்கான முன்னெடுப்பு இடம்பெறுகின்றது என அவர் பதிலுரைத்திருந்தார்.


தென்சூடான் விவகாரத்தில் ஆபிரிக்க யூனியனின் வழங்கலுக்கு அமைய, அங்கு விசாரணை நடத்தப்பட்டது என்றும் குறித்துரைத்திருந்தார்.


 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனவும், இந்தப் பின்னணியில்  சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக, சிறிலங்கா விடயத்தில் நவிப்பிள்ளை அம்மையாரின் Feb18அறிக்கை ஏலவே தெரிவித்திருந்தது.


ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகத்துக்கு அதிகாரம் இல்லையென சிறிலங்கா உட்பட சில நாடுகள் வாதிட்டு வருகின்றன.


நவநீதம் பிள்ளை அவர்களது இக்கருத்தாடலில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைச்சபை பிரதிநிதிகளின் கருத்துக்கள்

0 கருத்துக்கள் :