வவுனியாவிலிருந்து வந்த பேருந்தின் மீது காடையர்கள் தாக்குதல்

8.3.14

வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இரணைமடு பகுதியில் உணவகத்தில் உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளை யாழிலிருந்து சென்ற "கப்" ரக வாகனம் ஒன்றில் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த  பயணிகளை சிங்களத்தால் திட்டியுள்ளனர்.

அனைவரையும் சுடப்போவதாக மிரட்டியதோடு தமிழ் இனத்தையும் தமிழீழ விடுதலை புலிகளையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த எம்.பி.எஸ்.எல் வங்கி அதிகாரி நாகேந்திரம் புஸ்பவசந்தன் என்பவர் அதைத் தட்டிக்கேட்டார். அதன் போது அவரை "கப்" வாகனத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதோடு அக் குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

0 கருத்துக்கள் :