சிறிலங்காவில் மற்றொரு தொடருந்து பாதை கட்டுமானப்பணியும் சீனாவிடம் ஒப்படைப்பு

9.3.14

சிறிலங்காவின் தென்பகுதியில், மற்றொரு தொடருந்துப் பாதை நிர்மாணப் பணியும், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பெலியத்த தொடக்கம் கதிர்காமம் வரையான தொடருந்துப் பாதை அமைப்பின், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட நிர்மாணப் பணிகளே சீன நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
600 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த கட்டுமானப் பணிக்கு, சீனாவின் எக்சிம் வங்கி நிதியுதவி வழங்கவுள்ளது.
தொடருந்துப் பாதை கட்டுமானப் பணிகளை, சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
மாத்தறை தொடக்கம், பெலியத்தை வரையிலான 28 கி.மீ தூரம் கொண்ட தொடருந்துப்பாதை கட்டுமானப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை, மேற்படி சீன நிறுவனமே, 272 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :