இந்தியாவின் நலன்களுக்காகவே விடுதலைப் புலிகளை உருவாக்கினார் இந்திராகாந்தி

9.3.14

இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கினார் என்று, இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல சட்டநிபுணருமான ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“1987ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய - சிறிலங்கா அமைதி உடன்பாடு, இந்தியாவின் நலனுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.

அவர்கள் எமது சொந்த முகவர்களான றோவினால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
சிறிலங்காவில், சீனர்களும் பாகிஸ்தானியர்களும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற போது, இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்காவுக்குள் சில சக்திகள் இந்திரா காந்திக்கு தேவைப்பட்டன.

ராஜிவ்காந்தியே இந்திய நலனுக்குத் துரோகமிழைத்தார்.
போபர்ஸ் ஊழலில் சிக்கியியிருந்த போது தான், அவர் நரித்தந்திரம் கொண்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனவுடன் உடன்பாடு செய்து கொண்டார்.

இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டதன் மூலம் அவர் இந்திய நலனுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
அரசாங்க விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டவர்கள், பயிற்சியும், நிதயுதவியும் அளிக்கப்பட்டவர்களை, கொல்வதற்காகவே இந்திய இராணுவம் சிறிலங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :