இலங்கைக்கு எதிரான பிரேரணையை இம்முறையும் ஆதரிக்கிறது இந்தியா

21.3.14

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
  இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த கடந்த ஐந்து வருடங்களாக இனப்பிரச்சினை தீர்வு குறித்து இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
 
குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகின்ற போதும், இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
அத்துடன் அமெரிக்காவின் பிரேரணையில் இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரேரணையின் நான்காம் சரத்தில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பிலும் இந்திய மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிலைலயில் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு, இந்தமுறையும் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்தியா தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :