சிறிலங்கா கடற்படையிடம் முதல் ரோந்துப் படகை ஒப்படைத்தத அவுஸ்ரேலியா

31.3.14

சிறிலங்கா கடற்படைக்கு Bay ரகத்தைச் சேர்ந்த முதலாவது ரோந்துப் படகை அவுஸ்ரேலியா கையளித்துள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா சென்றிருந்த அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட், இரண்டு Bay ரக ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அகதிகள் படகுகளை கட்டுப்படுத்தும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் இந்தப் படகுகளை அன்பளிப்பாக வழங்க அவுஸ்ரேலியா முன்வந்திருந்தது. இதன்படி, முதலாவது படகு நேற்று முன்தினம், அவுஸ்ரேலியாவின் கெய்ன்ஸ் கடற்படைத் தளத்தில் வைத்து சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயிடம் ஒப்படைக்கப்பட்டது.

  இந்தநிகழ்வில் அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவும், அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு இந்த ரோந்துப் படகை கொண்டு செல்லும் சிறிலங்கா கடற்படைக் குழுவினரும், அவுஸ்ரேலிய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த ரோந்துப் படகு சிறிலங்கா கடற்படையால், ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.


0 கருத்துக்கள் :