வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்­கொண்­டுள்­ளது : விக்­கி­னேஸ்­வரன்

22.3.14

யாழ்.மாவட்ட கட்­ட­ளைத்­த­ள­பதி என்னைச் சந்­தித்து விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் மீள் இணை­கின்­றார்கள். இதனால் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று அறி­வித்­துள்ளார். இதன் மூலம் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்­கொண்­டுள்­ளது போல் தெரி­கின்­றது. சர்­வ­தேசம் எமது நாட்டின் நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணிப்­பதை அர­சாங்கம் விரும்­ப­வில்லை. இதனால் தான் இவ்­வ­ளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திக­திக்கு கிட்­டிய கால கட்­டத்தில் கதைகள், கட்­ட­விழ்க்­கப்­பட்டு ஜெனி­வா­விலும் கூறப்­பட்டு வரு­கின்­றன என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.


நான்கு அம்ச கோரிக்­கையை முன்­வைத்து மன்­னாரில் நேற்று சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் நடத்­தப்­பட்­டது. இந்­த­போ­ராட்­டத்தை முன்­னிட்டு அனுப்பி வைத்­தி­ருந்த செய்­தி­யி­லேயே முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மன்­னாரில் கூடி­யி­ருக்கும் வணக்­கத்­திற்­கு­ரிய மதப்­பெ­ரி­யார்­களேஇ என­த­ருமை சகோ­தர சகோ­த­ரி­களே!

உங்­க­ளுடன் இந்­நாளில் வந்து கலந்­து­கொள்ள முடி­யா­மைக்கு வருந்­து­கின்றேன். எனினும் எனது எண்­ணங்­களை இந்தச் செய்­தி­யி­னூ­டாக வெளிப்­ப­டுத்­து­கின்றேன். வட மாகாண தமிழ் மக்கள் அன்றும் இன்றும் துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அவர்கள் என்றும் அவ்­வாறு துன்­பத்­தினுள் அமிழ்ந்து உழ­லக்­கூ­டாது என்­பதால் தான் இந்த அடை­யாள உண்­ணா­வி­ர­தமும்இ பிரார்த்­த­னையும் கலந்த கூட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது. பல­வி­த­மான வேலை­க­ளிலும் ஈடு­பட்­டுள்ள நீங்கள் அனை­வரும் இதில் கலந்­து­கொள்ள வந்­த­மைக்கு நாங்கள் எங்கள் மனங்­க­னிந்த நன்­றி­களை உங்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்றோம்.

“என்றும்" துன்­பத்­தினுள் ஆளா­காது இருக்க இந்தக் கூட்டம் கூட்­டப்­ப­டு­கின்­றது என்றால் அதன் அர்த்தம் என்ன? அண்­மையில் யாழ்.குடா­நாட்­டுக்கு ஒரு புதிய கட்­டளைத் தள­பதி நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். முன்னர் கிளி­நொச்­சியில் பத­வி­யேற்­றி­ருந்த அவர் யாழ்.குடா­நாட்டில் பதவி ஏற்­றதும் பல நல்ல காரி­யங்­களைச் செய்தார். 200இற்கும் மேற்­பட்ட இரா­ணு­வத்­தடைப் பணி­யி­டங்­களை அவர் வாபஸ் பெற்­றுக்­கொண்டார். எமது விவ­சா­யிகள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதால் இரா­ணுவம் பயி­ரிட்­டுப்­பெற்ற மரக்­க­றி­களை திரு­நெல்­வேலிச் சந்­தைக்கு அனுப்­பாது தடுத்தார். யு9 வீதியில் குடா­நாட்­டிற்குள் இரா­ணு­வத்தால் நடத்­தப்­பட்ட இயக்­கச்சி தவிர்ந்த கடை­களை அவர் மூடச் செய்தார்.

இரா­ணு­வத்­தினர் மத்­தியில் கட்­டுப்­பா­டு­க­ளையும் கட்­டுக்­கோப்­பையும் கொண்டு வந்தார். இவ்­வாறு இருக்கும் போதுதான் ஜெனிவா வந்­தது. நேற்­றைக்கு முந்­தைய தினம் என்­னிடம் வந்து விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் வடக்கில் மீள் இணை­கின்­றார்கள். இதை உங்கள் கவ­னத்­திற்குக் கொண்டு வரு­வது எனது கடமை என்றார். பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்றார். படம் போட்டு எவ்­வாறு மீள் இணைப்பு நடை­பெற்­றி­ருக்­கின்­றது என்று தாங்கள் நம்­பு­கின்­றார்கள் என்­பதை எடுத்துக் காட்­டினார். இதை ஏன் உங்­க­ளுக்கு சொல்­கின்றேன் என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்­கொண்­டுள்­ளது போலத் தெரி­கின்­றது. பழைய நாட்­களை எமக்­கு­ணர்த்தும் விதத்தில் நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன என்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­ய­வந்­துள்­ளது.

ஆகவே அன்று நடந்­த­வற்றை என்றும் நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் நட­வ­டிக்­கைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட இருக்­கின்­றன. அவ்­வாறு நடந்து கொண்­டி­ருப்­ப­தற்கு எதி­ரா­கத்தான் இந்த உண்­ணா­வி­ர­தமும் இ பிரார்த்­த­னையும் இடம்­பெ­று­கின்­றன.

சர்­வ­தே­சங்கள் எமது நாட்டின் நட­வ­டிக்­கை­களைக் கண்­கா­ணிப்­பதை அர­சாங்கம் விரும்­ப­வில்லை. அத­னால்தான் இவ்­வ­ளவு காலமும் இருந்­து­விட்டு மார்ச் 28ஆம் திக­திக்குக் கிட்­டிய கால­கட்­டத்தில் கதைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு ஜெனி­வா­விலும் கூறப்­பட்­டு­வ­ரு­கின்­றன. நான் இரா­ணுவத் தள­ப­தி­யிடம் கேட்டேன் ஜெயக்­கு­மாரி வீட்­டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இரா­ணு­வத்­தினர் அங்கு இருக்­க­வில்­லையா என்று தூரத்தில் இருந்­தார்கள் என்றார். இரா­ணு­வத்­தினர் அங்கு இருக்கும் போதே சுட்­டு­விட்டுத் தப்பிப் போய்­விட்டார் என்றால் அதை ஏற்­பது சற்­றுக்­க­டி­ன­மாக இருக்­கின்­றது என்றேன். அவர் பதில் கூற­வில்லை.

எப்­ப­டி­யா­வது வட­மா­கா­ணத்தில் நிலைமை சீர­டை­ய­வில்லை என்ற தோற்­றத்தை வர­வ­ழைக்­கவே இந்த நாட­கங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்­பதே தமிழ் மக்கள் அனை­வரின் ஏகோ­பித்த முடிவு. எனவே கட்சி அடிப்­ப­டையில் அன்றி நாங்கள் வருங்­காலம் எமக்கு மேலும் இடர் தரு­வ­தாக அமை­யாது நல்­ல­வி­த­மாக அமைய வேண்டும் என்றே நாங்கள் இந்த அடை­யாள விர­தத்­தையும் பிரார்த்­த­னை­யையும் நடத்­து­கின்றோம்.

ஆனால் என­த­ருமை மக்­க­ளுக்கு ஒரு அன்­பான வேண்­டுகோள். வன்­மு­றை­க­ளுக்கு எந்தத் தரு­ணத்­திலும் இடங்­கொ­டுக்­கா­தீர்கள். எங்கள் அகிம்சை முறையே எமது ஆயுதம். எமது பிரார்த்­த­னையே எமது கேடயம். இவற்றின் உத­வி­யுடன் எம்மை உறுத்­தப்­பார்க்குஞ் சக­ல­ரையுந் தர்­மத்தின் பக்­கம்­சாய வைப்போம்.

எமது இன்­றைய ஒன்­று­கூடல் எம் அனை­வ­ருக்கும் ஒரு விழிப்­பு­ணர்­வைத்­தரும் நிகழ்­வாக அமை­யட்டும். நாங்கள் எந்த விதத்­திலும் அர­சாங்க எதிர்ப்பில் ஈடு­ப­ட­வில்லை. ஆனால் இங்கு போர்க்­கால முடிவில் நடை­பெற்­றவை சம்­பந்­த­மான ஆய்வு நடை­பெற இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. நடப்­பவை சம்­பந்­த­மாக அர­சாங்கம் ஆற அமரச் சிந்­தித்துப் பார்க்­க­வில்லை. அத்­துடன் எதேச்­ச­தி­கா­ர­மாக இங்கு நடக்கப் போகின்­ற­வற்­றிற்கு இன்று இடப்­படும் அடித்­த­ளத்தை ஆராய எமக்கு அனு­ச­ர­ணைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே அடுத்த நாடு­க­ளுக்குச் சொல்லி ஆழ­வேண்­டிய ஒரு சந்­தர்ப்­பத்தை எமக்கு அர­சாங்­கமே எடுத்துத் தந்­துள்­ளது. இதற்­காக எம்மைக் குற்­றங்­கூ­று­வதில் பய­னில்லை.

மனித உரி­மை­யா­ளர்கள் ருச்சி ஃபர்­ணாண்டோ, அருட்­தந்தை ப்ரவீன் மகேசன் ஆகியோர் அநி­யா­ய­மாகக் கைது செய்­யப்­பட்டுத் தடுத்து வைக்­கப்­பட்டு இரண்டு நாட்­களின் பின்னர் குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இன்றி விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். இன்று பூஸ்ஸா முகா­முக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்கும் ஜெயக்­கு­மாரி கூட ஒரு நாள் வழக்­கே­து­மின்றி விடு­த­லைப்­பட வேண்­டி­ய­வரே. ஆனால் அது­வ­ரையில் அவர் அனு­ப­விக்­கப்­போகும் நரக வேத­னைகள், அவரின் மகள் அனு­ப­விக்­கப்­போகும் அவ­லங்கள் ஆகி­ய­ன­வற்­றிற்கு யார் பதில் சொல்லப் போகின்­றார்கள்? ஜெனி­வாவில் கதை அளக்க இவர்கள் தான் கிடைத்­தார்­களா? அர­சாங்­கமும்இ இரா­ணு­வமும் ''புலி வந்­துள்­ளது, புலி வந்­துள்­ளது!' என்று ஜெனி­வாவில் கூக்­குரல் இட இவர்கள் தான் பலிக்­க­டாக்­க­ளாகக் கிடைத்­தார்­களா? இரா­ணு­வத்தை வெளி­யேறச் சொன்னால் இதே புலிக்­கதை கூறி எமக்கு இரா­ணு­வத்தின் பாது­காப்புத் தேவை என்­கி­றார்கள். அர­சாங்­கமும், இரா­ணு­வமும் சிவில் பொலிஸ் படையை வேண்­டு­மானால் விருத்­தி­செய்­யுங்கள். கூடிய தமிழ்ப்­பேசும் பொலிஸ்­கா­ரர்­களை பொலிஸ் பத­வி­களில் நிறுத்­துங்கள். அதை­விட்டு விட்டு அப்­பா­வி­களை கைது செய்து அவர்­க­ளுக்கு அவ­லங்­களை ஏற்­ப­டுத்­தா­தீர்கள் என்று கூறவே இந்த விர­தமும், பிரார்த்­த­னையும் இதை­விட எமது காணி­களைப் பலாத்­கா­ர­மாக அர­சாங்கம் வெளி­மா­வட்­டங்­களில் இருந்து வரு­கின்­ற­வர்­க­ளுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதையும் எதிர்த்து இந்த விரதத்திலும், பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம்.

எமது அவலங்களையும் இதுவரை காலமாக எம்மை அடக்கி ஆண்டுவந்த நிலைமையையும் அணிதிரண்டு அனைத்து உள்ளூர் மக்களுக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்தியம்ப இந்த அஹிம்சை வழியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். மக்கள் யாவரும் அஹிம்சை வழிநின்று தமது கட்டுப்பாட்டையும், கட்டுக்கோப்பையும் வெளிக்கொண்டுவரும் விதமாக அமைதியுடன் அணிதிரண்டு எமது அந்தரங்கத்தை வெளிக்கொண்டுவர இந்த நாளை உபயோகிப்போமாக! இறைவன் எம்மையெல்லாம் நல்வழிப்படுத்தி நடத்துவானாக!

0 கருத்துக்கள் :