ஜெனிவா தீர்மானம்: இந்தியாவை மடக்கியது அமெரிக்கா – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

16.3.14


ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது உறுதியாகி விட்டது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பான குற்றச்சாட்டும், அதன்மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தை வடக்கு மாகாணசபையும், அதன் முதலமைச்சரும் பயன்படுத்துவதற்கு வழங்கும்படியான கோரிக்கையும் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய கரிசனையாக இருந்து வந்தன.

இந்த விடயங்கள் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு சம்பந்தமான சில முக்கிய விடயங்கள் தொடர்பாக, இந்தியாவின் பலத்தை வலுப்பெறச் செய்திருப்பதாக புதுடில்லி உணர்கிறது.
எனவே, இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்பது நிச்சயமாக உறுதியாகி விட்டது.

மியான்மாரில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய அரசுக்கு அனுப்பி வைத்த அறிக்கையின் பின்னரும் கூட இது தான் நிலைமை.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :