புலம்பெயர் அமைப்புக்களுக்கு நன்றி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு

26.3.14

அனைத்துலக விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு அழுத்தங் கொடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில்  இடம்பெற்றிருந்த விவாதத்தினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியிருந்த ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்துலக நாடுகளது பெரும்பான்மை வாக்கினை அமெரிக்கத் தீர்மானம் பெற்றுக் கொள்ள  வேண்டுமென தாங்கள் எதிர்பார்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


0 கருத்துக்கள் :