முன்னாள் வான்புலி வானோடியைத் தேடுகிறதாம் சிறிலங்கா காவல்துறை

24.3.14

சந்தேகநபர் ஒருவரைத் தேடுவதாக, விடுதலைப் புலிகளின் வான்புலி வானோடி ஒருவரின் படத்தை சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தேவியன் என்று அழைக்கப்பட்ட, முன்னாள் போராளி, பயங்கரவாத புலனாய்வுக் காவல்துறையினரின் விசாரணைக்காக தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்  வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடமாடுவதாகவும், கொழும்புக்கு வந்து செல்லவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

இவர் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோபி, மற்றும், அப்பன் ஆகிய இருவரைத் தேடி, வடக்கில், தேடுதல்கள் தீவிரப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கவும், வடக்கிலும் கிழக்கிலும் தேடுதல்கள் தீவிரப்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

0 கருத்துக்கள் :