இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை; நியூசிலாந்து கிறீன் கட்சி அறிவிப்பு

11.3.14

இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது என நியூசிலாந்து கிறீன் கட்சியின் பேச்சாளர் ஜேன் லோகீ அறிவித்துள்ளார். இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நியூசிலாந்து பூரண ஆதரவு அளிக்க வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது. ஏன் எனில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மோசமாக காணப்படுகிறது.

எனவே இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஜெனீவாவில் வலியுறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :