ஐ.நா முன்றலை அதிர வைத்த மக்கள் எழுச்சி! மஹிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு! பாரியளவில் கண்ணீர்ப் புகை பிரயோகித்த பொலிஸ்!

10.3.14

இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
இவ்வார்ப்பாட்டத்தில், ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர், தமிழ் இன உணர்வாளர் புகழேந்தி தங்கராஜா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
இவ்வார்ப்பாட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 5:45 மணியளவில் இப் பாரிய ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வரும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களினால் மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டபோது மிகப் பிரமாண்டமாக எழுந்த புகையினைக் கண்ட பொலிஸார் கண்ணீர்ப் புகையினைப் பிரயோகித்ததில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


மேலும் ஐ.நா. சுற்றுப்புற நகர வீதிகள் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :