சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் –ஜெனிவாவில் பிரித்தானியா காட்டம்

3.3.14

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைர்,
போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான, சுதந்திரமான விசாரணையை நடத்தத் தவறியுள்ளது.

எனவே, சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அனைத்துலக விசாரணை சிறிலங்காவில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

0 கருத்துக்கள் :